திருநங்கைகளுக்காக ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் கிருத்திகா உதயநிதி
'வணக்கம் சென்னை' படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது சமூதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, 'சதையை மீறி' என்னும் மியூசிக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி . கிருத்திகா உதயநிதி இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவை தயாரிப்பதில் பக்கபலமாய் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விவேக் வேல்முருகனின் வரிகளில் தோன்றி இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. இந்த மியூசிக் வீடியோவை 11.02.17 அன்று இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார்.
"நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து கேட்பது அன்பு ஒன்றை...
