Friday, January 16
Shadow

Tag: #KJR Studio

சர்ச்சை இயக்குனரோடு கைகோர்த்த நயன்தாரா!

சர்ச்சை இயக்குனரோடு கைகோர்த்த நயன்தாரா!

Latest News, Top Highlights
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் சர்ச்சையை கிளப்பிய குறும்படம் ‘லக்‌ஷ்மி’. இக்குறும்படம் குறித்து பல இடங்களில் விவாதமும் ஏற்பட்டது. இணையதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இவர் இயக்கிய மா என்ற குறும்படமும் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சர்ஜுன். அறம், குலேபாகவலி படத்தினை தயாரித்த கே ஜி ஆர் ஸ்டுடீயோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க திகில் கலந்த பேய் படமாக உருவாகவுள்ளதாம். விரைவில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது....