கோடிட்ட இடங்களை நிரப்புக – திரைவிமர்சனம் (Rank 2.5/5 )
ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் பார்த்திபன், சாந்தனு, பார்வதி நாயர், சிம்ரன், தம்பி ராமையா, சிங்கம் புலி அண்ணாவி… ஆகிய நட்சத்திரங்கள் நடிக்க வெளிவந்திருக்கம் லவ் & சஸ்பென்ஸ் திரைப்படம் தான் “கோடிட்ட இடங்களை நிரப்புக”.
சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார்.
அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின்...
