
தோழர் நல்லக்கண்ணுவை கண்கலங்க வைத்த கொலை விளையும் நிலம் ஆவணப்படம்
காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை எளிமையாகவும் முழுக்க முழுக்க நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’. காவேரி பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை நாட்டிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த வாரம் யூட்யூபில் வெளியிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தை பாராட்டி பகிர்ந்தார். அடுத்த நாளே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பகிர்ந்தார். அந்த வரிசையில் இன்று, மூத்த அரசியல் தலைவரும் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக விளங்கு...