
நயன்தாராவின் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தில் கொலையுதிர் காலம் வரும்14ம் தேதி முதல்
முழுமையான ஈடுபாடும், இனிய உறவும் தான் ஒரு படத்தை வளர்த்தெடுக்கிறது. கொலையுதிர் காலம் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்துள்ளது, குறிப்பாக நயன்தாராவின் புதுமையான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை பற்றி கூறும்போது, "கொலையுதிர் காலம் படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற நான் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படத்தை பார்த்தேன், இது ஒரு முழுமையான படம், இந்த திரில்லர் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் அனைவரும் விரும்பும் ஜானராக திரில்லர் இருப்பதால், இந்த படம் அதற்கு ஏற்ற நல்ல வரவேற்பை பெறும். நயன்தாரா மற்றும் மற்ற நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சக்...