மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் “குடிமகன்”
ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் வழங்கும் 'குடிமகன்' இந்த படத்தில் ஜெய்குமார், ஜெனிபர், மாஸ்டர் ஆகாஷ், பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி வீரசமர், கிரண், , பாவா லெட்சுமணன் நடிப்பில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அமைத்து தயாருக்கிறார் சத்தீஷ்வரன்
“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.
விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத...
