குற்றம் 23 – திரை விமர்சனம் (குற்றம் இல்லாதவன் ) Rank 4.5/5
தமிழ் சினிமாவில் அத்திபூ போல சில சமயங்களில் சிறந்த படங்கள் வரும் அப்படியான ஒரு சிறந்த படமாக தான் இந்த வாரம் வெளியான குற்றம் 23 என்று சொல்லவேண்டும் எதாவது ஒரு படத்தில் தான் எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கும் அது போல தான் இந்த படமும் இந்த படத்தின் கதை திரைகதை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் கலை இப்படி எல்லோரையும் பாராட்ட தோனும் அப்படி தான் இந்த படத்தில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் நிச்சயமா பாராட்ட வேண்டியே ஆகவேண்டும்.
இயக்குனர் அறிவழகன் என்னடா தொடர்ந்து திரில்லர் படமாக எடுக்கிறார் அப்படி இந்த படத்தில் என்ன செய்துள்ளார் என்ற கேள்வி குரியோடுதான் திரையரங்கத்துக்குள் சென்றேன் தமிழில் மிக சிறந்த ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும் அதே போல எப்பவும் போலீஸ் கதைதான் அதிகமாக தேர்வு செய்கிறார் அதிலும் வெற்றி கண்டுள்ளார் நீண்ட நாளுக்கு பிறகு அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லமல் ஒருபோ...