“பயப்படாம கட்டிப்புடி” ; ‘X வீடியோஸ்’ நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்' படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான 'பெங்களூரு நாட்கள்' படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர். மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக.. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.
எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்.. என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.. அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டு...
