
செப்டம்பர் மாத ரிலீஸ் பந்தயத்தில் ‘வீரா’.
இந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாவதிற்கு ஓரிரு படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியில் 'வீரா' படமும் களமிறங்கியுள்ளது மேலும் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கூட்டியுள்ளது. கிருஷ்ணா கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா,மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு,ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை, பல வெற்றி படங்களை தயாரித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள 'R S இன்போடைன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா ராமன் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன்-காமெடி படம் ரசிகர்களை மிகவும் கவரும், என ரிலீஸ் உற்சாகத்தில் இருக்கும் இப்படக்குழு உறுதியாக கூறுகின்றனர் . வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிண்ணனி இசையை s.n பிரசாத் அமைத்துள்ளார் இப்படத்தில் பாக்கியம் ஷங்கர் எழுத்து பணியாற்றியு...