ஹீரோவாக விக்கல்ஸ் விக்ரம்… வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! படப்பிடிப்பு 60% நிறைவு
ஹீரோவாக விக்கல்ஸ் விக்ரம்... வேகமெடுக்கும் ‘லைட் வெயிட் பேபி’! படப்பிடிப்பு 60% நிறைவு
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விக்கல்ஸ் விக்ரம், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடி பின்னணியில் தயாராகி வருகிறது. விக்கல்ஸ் விக்ரமுடன் இணைந்து ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துவருகிறார். இருவரின் புதிய திரைஜோடியும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹரிஷ் கோமே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப...
