
LKG படத்துக்கு மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி சொன்ன படக்குழு
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
ஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதில் ஆர்...