
கவின் சாக்க்ஷி காதல் விவகாரத்தில் நடந்த அநியாத்துக்கு நான் தான் காரணம் – லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோருக்கு இடையே நடந்த காதல் அத்தியாயங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக வைத்திருந்தது சண்டை, ஊடல் பின்பு மீண்டும் கூடல் என மொத்த கவனமும் அந்த மூன்று பேர் மேல் தான் இருந்தது. இந்நிலையில் இந்த பரபரப்பு இனி இருக்காது என்று தான் நேற்று நடந்த அத்தியாயங்கள் நமக்கு சொல்லிய உண்மை.
நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது, அல்லது கேட்க வேண்டியவற்றை ரகசியமாக கடிதம் மூலம் சொல்லிக்கொள்ளுங்கள் என்று பிக்பாஸ் சொன்னவுடன் பிரச்சனை பூதாகரமானது.
அதுவரை அவர்கள் மூன்று பேருக்குள் மட்டுமே இருந்த பிரச்சனை பொதுவெளியில் போட்டு உடைக்கப்பட்டது. கவினும் சாக்ஷியும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் சரவணன் உள்ளிட்டோர் கவினை சமாதானப்படுத்த முய...