யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இணையும் விஜய் சேதுபதி இயக்குனர் சீனு ராமசாமி
ஒரு சில நடிகர்களுக்கு ஒரு சில இயக்குனர்கள் தான் மிகவும் பொருத்தமாக செட் ஆவார்கள் எடுத்துக்காட்டுக்கு ரஜினிக்கு S.P.முத்துராமன் மாதிரி கமலுக்கு சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் அது போல நம்ம கருப்பு எம்.ஜி.ஆர். விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி என்று தான் சொல்லணும் இவர் தான் விஜய் சேதுபதியை நம்பி ஹீரோ ரோல் கொடுத்தவர் இதுனாலே விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி என்றால் தனி மரியாதை இந்த கூட்டணி இணைந்த எல்லா படமும் மிகவும் பேர் வாங்கி கொடுத்த படம் என்றும் சொல்லலாம் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் ‘மாமனிதன்’. இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் கதை, தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்படுகிறது. அதுவும், எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் கதையாக எழுதியிருக்கிறார் சீனு ராமசாமி என்...
