மாநகரம் படத்தின் வில்லன் மதுசூதனின் விறுவிறு பேட்டி
அண்மையில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள படம் 'மாநகரம்'.
வில்லன் பாத்திரமாக இருந்தாலும் இப்படத்தின் கதை மையம் கொள்ளும் பாத்திரமாக இருப்பது பிகேபி என்கிற பயங்கர மான அந்தத் தாதா பாத்திரம் தான்.
அப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுசூதன் , பார்ப்பவர்களை மிரள வைத்தாலும் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசவில்லை.
அடித்து துவைத்து ஆவேசம் காட்டவில்லை. பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தே தன் உடல் மொழியால் அப்பாத்திரத்தின் அடர்த்தியைக் காட்டியிருக்கிறார். பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
தான் நடிக்கும் படங்களில் இப்படித் தன் கரடு முரடு தோற்றத்தாலும் அளவானஅடக்கமான உடல் மொழியாலும் அசத்தி ,இன்று
விறுவிறுப்பான வில்லன் நடிகராக வளர்ந்து வருகிறார் இந்த மதுசூதன்.
விஜய் மில்டன் இயக்கிய
'கோலி சோடா'வில் நாயுடுவாக அழுத்தமாகப் பதிந்து அலறவைத்தவர், அதற்கு முன் 10 படங்களில் நடித்து இருக்கிறார். ஆ...