“மாணிக்” என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின் !
நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர் C அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன்.
'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். தரன் படத்துக்கு மிகச் சிறப்பான இசையை தந்துள்ளார். அவர் நான் கேட்டதை சரியான அளவுகோலில் பின்னணி இசையாக தந்துள்ளார். அவரு...