மாரி 2 – திரைவிமர்சனம் (நீட்) Rank 3/5
மாரி முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மாரி இரண்டாம் பாகமும் வந்துள்ளது. அதே இயக்குனர் ஆனால் வேறு ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளருடன் தனுஷ் இந்த முறை களமிறங்கியுள்ளார்.
பிரபல ரவுடியான மாரியை (தனுஷ்) கொல்ல தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. 100முறை அதை முறியடித்துள்ளார் என்கிற சாதனையை கொண்டாடும் அளவுக்கு அது தொடர்கிறது. மாரி கேங்கில் கிருஷ்ணாவும் சேர்ந்து தான் வழிநடத்துகிறார். போதை பொருள் கடத்தல் மட்டும் கூடாது என்கிற விஷயத்தில் தனுஷ் உறுதியாக இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க வில்லன் டோவினோ தாமஸ் மாரியை கொல்லவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்பி வருகிறார்.
இன்னொரு பக்கம் கலெக்டராக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார், சென்னையில் இருக்கும் மொத்த கேங்ஸ்டர்களையும் ஒழித்துக்கட்டுவேன் என தனுஷை எச்சரிக்கிறார்.
லவ் நம்ம கேரக்டருக்கு செட் ஆகாது என ச...