தனுஷுக்கு ரஜினி வைத்த ஆப்பு
வரும் டிசம்பர் 21 ரிலீஸ் ஆகும் படங்களை தயாரிப்பாளர் சங்கம் ஆர்டராக வைத்திருந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டை தூக்கிப்போட்டு மிதித்தார் தனுஷ். ஆமாம் தனது மாரி - 2 பெரிய அளப்பறையை ஏற்படுத்தியது. தனுஷுக்கு பணிந்த தட்டிக் கேட்கமுடியாமல் திணறிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘டிசம்பர் 15, 21 அன்று யார் வேண்டுமானாலும் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என அறிவிக்க வேண்டிய இயலாமை ஏற்பட்டது.
இதனால் பயங்கர அப்சட் ஆன விஷ்ணு விஷால் ‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் நுழைந்துவிட்டது இதற்கு தலைவர் விஷால் காரணமல்லை’, தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை, சிஸ்டம் கெட்டுப் போச்சு என சொல்பவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களால் தயாரிப்பாளர்கள் சங்க ஒழுங்கு முறையில் சிஸ்டம் குளறுபடியானது. இந்த குளறுபடி ஏற்படக் காரணமாக இருந்தது ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்துள்ள மாரி - 2. ரிலீஸ். த...
