மாரி செல்வராஜைப் பற்றி உலக மக்களுக்குச் சொல்ல இயக்குநர் இமயம் பாரதிராஜா புகழாரம்!
மக்கள் மனங்களை வென்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில் “மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்” ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கௌதமன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,
“ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அவற்றை விட ஒருபடி மேலிருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி மாரி செல்வராஜின் “பரியேறும் பெருமாள்” திரைப்பட்த்தை விமர்சிப்பதற்கு அவனைத் தாண்டி ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
இந்தப் படம் பார்த்து முடித்ததும் மறுபடியும் மறுபடியும் எனக்கு மாரி செல்வராஜுடைய முகம் தான் வந்து போன...
