மாயவன் – திரை விமர்சனம் Rank 2/5
குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன், திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார்.
கொலையாளியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார்.
லாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்க...