
இயக்குனராக அவதாரம் எடுக்கும் R.K.சுரேஷ் ஹீரோவாக களம் இறங்கும் யோகிபாபு
தமிழில் முன்னணி காமெடியர்களுள் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அப்படத்தில் வரும் 'எனக்கு கல்யாண வயசு தான்' பாடல் அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
இப்பட வெற்றியைத் தொடர்ந்து வடிவேலு, சந்தானம் போன்றவர்களின் வரிசையில், கூர்க்கா படத்தின் மூலம் அவரும் ஹீரோவாகப் போவதாகச் செய்திகள் வெளியானது
ஆனால், அதனை அவர் வீடியோ மூலம் மறுத்திருந்தார். கூர்க்கா படத்தில் வெளிநாட்டுக்காரரும், நாயும் தான் ஹீரோ என்றும், வழக்கம் போல் தான் காமெடியனாகத் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், யோகி பாபுவை நாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்க இருக்கிறார்.
மெட்ராசில் ஒர...