19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்! – ‘மதுரை டூ தேனி – 2’ படக்குழுவினரின் புதிய முயற்சி!
தமிழ்சினிமாவில் 'சிங்கம்', 'வேலையில்லா பட்டதாரி' என மெகா ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீஸனாகி விட்டது.
அந்த வரிசையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து 'மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி' படத்தின் இரண்டாம் பாகமாக போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படம் தான் 'மதுரை டூ தேனி - 2'.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்ப...
