கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !
சமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில் டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் நடக்கும் மோதலையும், படத்தின் தன்மையையும் அட்டகாசமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது டீஸர்.
ஒருபுறம் டீஸருக்கு குவியும் வாழ்த்துக்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அதே நேரம், இணையத்தில் யூடுயூப் தளத்தில் 2.9 ம...
