![மிகவும் சவாலான ஒரு படம் மகளிர் மட்டும் நாயகி ஜோதிகா பேட்டி :-](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/09/jothikaa.jpg)
மிகவும் சவாலான ஒரு படம் மகளிர் மட்டும் நாயகி ஜோதிகா பேட்டி :-
மகளிர்மட்டும் ரோட்- ட்ரிப்பில் ஒன்றில் மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பது தான் கதை... இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி , சரண்யா பொன்வண்ணன் , பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும் தான் என்னை Comfort zoneக்கு கொண்டுவந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள...