தெலுங்கு சூப்பர்ஸ்டார் ‘ஸ்பைடர்’ ஹீரோ மகேஷ் பாபு தமிழ் ஹீரோ அறிமுக விழா
ரசிகர்களை தனது சிலந்தி வலையால் கட்டி போட்டுக்கொண்டிருக்கும் 'ஸ்பைடர்', அதன் கதாநாயகனான மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று ''பூம் பூம்'' என்ற பாடலை வெளியிட்டு இந்திய ரசிகர்களையே கொண்டாட வைத்து திரை உலக வணிக வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தினுடைய ஒரு பிரம்மாண்ட விழா வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது கதாநாயகன் மகேஷ் பாபுவை அதிகார்வப்பூரமான தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாகும். தமிழ் ரசிகர்களின் மனதில் என்றுமே வளர்ந்து கொண்டிருக்கும் மகேஷ் பாபு 'ஸ்பைடர்' படத்துக்காக தன் சொந்த குரலில் டப் செய்து முடித்துள்ளார். தனது முதல் தமிழ் படமான 'ஸ்பைடர...