Saturday, October 12
Shadow

Tag: #magizhchi #paranjith

உலக அளவில் 2019 க்கான சிறந்த அரசியல் பாடல் தொகுப்பில் பா.இரஞ்சித் தின் “மகிழ்ச்சி” ஆல்பம் இடம்பெற்றது.

உலக அளவில் 2019 க்கான சிறந்த அரசியல் பாடல் தொகுப்பில் பா.இரஞ்சித் தின் “மகிழ்ச்சி” ஆல்பம் இடம்பெற்றது.

Latest News, Top Highlights
இயக்குனர் பா.இரஞ்சித் தின் இசைக்குழுவான "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் " குழுவினரின் "மகிழ்ச்சி" ஆல்பம் சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க தனியிசைக்கலைஞர்களைக்கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது. தென்மா இசையமைத்துள்ளார். இந்தியாவில் நிலவும் சாதிய ,வர்க்க , பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்னிலையில் உலக அளவில் அரசியல் பார்வையுடைய பத்து பாடல் தொகுப்புக்களில் "மகிழ்ச்சி" ஆல்பமும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பாடல் தொகுப்புக்களில் "மகிழ்ச்சி" என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....