உரு – திரைவிமர்சனம் ( அழகிய உருவம் ) Rank 3/5
இந்த வாரம் நான்கு அறிமுக இயக்குனர்களின் படங்கள் வெளியாகி இருக்கிறது இவை அனைத்தும் நிச்சயம் தமிழ் சினிமாவின் முன்னேற்றம் என்று தான் சொல்லணும் காரணம் எல்லோரும் இதுவரை வராத புதுவித கதையுடன் தான் வலம் வந்துள்ளனர். வித்தியாசமான திரைகதை தொழில்நுட்பம் இதுவே தமிழ் சினிமாவின் பலம் இந்தியாவிலே மிக சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் என்றால் அது தமிழ் சினிமாவில் தான் உள்ளனர் என்று நிருபித்துள்ளனர்.
இந்த படத்திலும் படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் திரைகதை ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் என்று சொல்லணும் ஏன் இயக்குனரின் காட்சியமைப்பு பலம் அறிமுக இயக்குனர் என்றாலும் அதை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் விக்கி ஆனந்த்
இந்த படத்தில் மீண்டும் வெற்றி கூட்டனி ஜோடி கலையரசன் மற்றும் தன்சிகா மைம்கோபி,டேனியல், தமிழ் செல்வி கார்த்திகா ஜெயபாலன் இவர்கள் மட்டும் தான் படத்தில் மிக குறைந்த நட்சத்திரம் வைத...