கும்பகோணத்தில் கேமரா கண் திறக்கிறது… ‘மாமி ராக்ஸ்’ படப்பிடிப்பு தொடர் பயணம்!
கும்பகோணத்தில் கேமரா கண் திறக்கிறது… ‘மாமி ராக்ஸ்’ படப்பிடிப்பு தொடர் பயணம்!
மாதவன் – வித்யா பாலன் கூட்டணி… இயக்கத்தில் பால்கி… இசையில் இளையராஜா… ஒளிப்பதிவில் பி.சி.ஸ்ரீராம்!
தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது சில கூட்டணிகள் அறிவிக்கப்படும்போதே எதிர்பார்ப்பை எகிறச் செய்யும். அப்படியொரு கவனத்தை ஈர்க்கும் கூட்டணியாக உருவாகியிருக்கிறது மாதவன் – வித்யா பாலன் நடிக்கும் புதிய திரைப்படமான ‘மாமி ராக்ஸ்’.
இந்தப் படத்தின் சிறப்பம்சமே அதன் நட்சத்திரப் பட்டியல் மட்டுமல்ல; தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும்தான். இந்தித் திரையுலகில் தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்ற இயக்குநர் பால்கி இப்படத்தை இயக்குகிறார். இசைக்கு இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் எனத் தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஆளுமைகள் ஒரே படைப்பில் கைகோத்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பின்னணிய...
