விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “குறள் 388”
விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் “குறள் 388”
G . S. கார்த்தி இயக்குகிறார் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு..
இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் “குறள் 388”
தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது..
தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் “வோட்டர்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது
விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.
மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி,நாசர் பிரகதி,முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.
இசை – s.s.தமன்
வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
...
