மீண்டும் ஈழ தமிழர்களை பற்றிய ஒரு படம் “நான் திரும்ப வருவேன்”
ஈழத்தில் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் அவ்வபோது குரல் எழும்பிக் கொண்டிருந்தாலும், இந்திய தேசத்தின் பிற மாநில திரையுலகம் என்னமோ, “தங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி...” என்ற நிலையில் தான் இருந்து வருகின்றன. ஆனால், இதை மற்றும் விதத்தில் முதல் முறையாக தமிழ் சினிமா அல்லாத பிற மொழி சினிமா நடிகராக அறியப்பட்ட மஞ்சு மனோஜ், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான படம் ஒன்றில் நடித்துள்ளார்.
‘நான் திரும்ப வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. அஜய் அண்ட்ரூஸ் நுதக்கி இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சு மனோஜ் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்து, பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்த மோகன்...
