வியாசர்பாடியின் மண்ணில் இருந்து ஒலிக்கும் ‘மன்னாரு’! – மன்னர் முத்து குரலில் புதிய இசைப் பயணத்தை தொடங்கிய ரகிடா என்டர்டெயின்மென்ட்
வியாசர்பாடியின் மண்ணில் இருந்து ஒலிக்கும் ‘மன்னாரு’! – மன்னர் முத்து குரலில் புதிய இசைப் பயணத்தை தொடங்கிய ரகிடா என்டர்டெயின்மென்ட்
சந்தோஷ் நாராயணன் இசையில், கென் ராய்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மன்னாரு’ பாடல்
தமிழ் இசை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுவிதமான இசை அனுபவங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், இசையின் மூலம் ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறது ரகிடா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனத்தின் முதல் இசை வெளியீடாக உருவாகியுள்ள ‘மன்னாரு’ பாடல், ஆகஸ்ட் 8 முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ளது.
மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கியுள்ள இந்தப் பாடல், வழக்கமான இசை வெளியீடாக இல்லாமல், தனக்கென ஒரு தனித்துவமான களத்தையும், இசை மற்றும் காட்சிகளின் மூலம் புதிய அனுபவத்தையும் உருவாக்கும்...
