‘மனுசனா நீ’ திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!
நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம், பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன்.
வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை. தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை.
ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். ...