பிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை மீரா மிதுன்
பிக்பாஸ் 3 தான் இப்போதைக்கு தமிழ்நாட்டின் ஒரே பரபரப்பு. நடிகர் கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார். முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ்.
இதுவரை 15 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 16 வது சிறப்பு போட்டியாளராக மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா புகழ் மீரா மிதுன் களமிறங்க உள்ளார்.
மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் வெகுவாக ஆர்வம் கொண்டிருந்த இவர் ஒரு தமிழ்ப்பெண்ணாக கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் மாடலிங் ...
