Tuesday, January 14
Shadow

Tag: #MeghaAkash

அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
கெளதம் கார்த்திக் – ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க ஒப்பந்தமானார். அதர்வாவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். தற்போது, இப்படத்திற்கு ‘பூமராங்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திக...