மெர்சல் படத்தை கலாய்த்த முன்னணி இயக்குனர் – யார்? என்ன சொன்னார்?
மெர்சல் படத்தை ஓரி சில இயக்குனர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக இயக்குனர் தங்கர்பச்சன் மிகவும் மிக மோசமாக விமர்சித்து வந்தார் அவரை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் மேலும் ஒரு முன்னணி இயக்குனர் விமர்சனம் செய்துள்ளார்.
தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, இந்த படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலில் மாஸ் காட்டியது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் ஜாலியாக கலாய்த்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அப்போது மெர்சல் படத்தில் இருந்து நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள் என கேட்டனர், அதற்கு ஆக்ஷன் படம் எப்படி எடுக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக கூறியுள்ளார்....
