Sunday, April 19
Shadow

Tag: #MrX #MrXReview #Arya #GauthamKarthik #ManuAnand #TamilCinema #Kollywood #MovieReview #SpyThriller #TamilMovies2026 #manjuwarrior #athulya #kqlivengqt

Mr.X – திரை விமர்சனம் (Rank 3.5/5)

Mr.X – திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
திரைப்பட விமர்சனம் | “மிஸ்டர் எக்ஸ்” – தமிழ் சினிமாவில் புதிய ஸ்பை அத்தியாயம் தமிழ் திரையுலகில் இதுவரை பெரிதாக ஆராயப்படாத ‘ஸ்பை த்ரில்லர்’ வகையை மையமாகக் கொண்டு, இயக்குநர் மனு ஆனந்த் உருவாக்கியுள்ள “மிஸ்டர் எக்ஸ்” திரைப்படம், வித்தியாசமான முயற்சியாக திரையரங்குகளை அடைந்துள்ளது. ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனன்யா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், கதை சொல்லும் விதத்திலும், தொழில்நுட்ப தரத்திலும் கவனம் ஈர்க்கிறது. 1960–65 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த படத்தின் மையக் கதை, இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த ரகசிய ஏஜெண்ட் “மிஸ்டர் எக்ஸ்” சுற்றியே நகர்கிறது. அணு ஆயுத தயாரிப்பிற்கு தேவையான முக்கியமான கதிர்வீச்சு பொருளை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அந்த ரகசியம் எதிரி நாட்டின் உளவாளிகளிடம் சிக்...