சிங்காரம் – திரை விமர்சனம்
சிங்காரம் – சிரிப்புடன் தொடங்கி, சமூகப் போராட்டத்தின் வலியை உணர்த்தும் அழுத்தமான படைப்பு!
நடிகர்கள்: யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், வேலா ராமமூர்த்தி, தீபா சங்கர், செந்த்ராயன், மாரிமுத்து, படவா கோபி மனோபாலா கனிஷ்கர் உள்ளிட்டோர்.
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ். குமார்.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகளைப் பேசும். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க படைப்பாக உருவாகியுள்ளது சிங்காரம்.
புதுச்சேரியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நரிக்குறவர் இன மக்களின் வாழ்வியல், அவர்களின் பூர்வீகம், சமூக அடையாளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மணி வியாபாரியா...
