
100 நாட்டுப்புறக் கலைஞர்கள்… ஒரே பாடலில்! ‘எல்லம்மா’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரம்மாண்ட இசை முயற்சி!
இசையில் புதுமையைப் புகுத்தும் முயற்சியாக, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
‘ராக்ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த முறை தனது இசைப் பயணத்தில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களை ஒரே பாடலில் ஒன்றிணைத்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். நாட்டின் பல்வேறு மண்ணின் இசையும், கலாச்சாரத்தின் தனித்துவமும் இந்தப் பாடலில் இடம்பெறவுள்ளது.
‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கும் இப்படத்தை தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது 100 நாட்டுப்புறக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள டைட்டில் பாடல் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், இந்தியாவின் பல்வேறு நாட்டுப்புற இசை மரபுகளை ஒரே தளத்தில் கொண்டுவரும் முயற்சியாக அமைந்துள்ளது.
‘எல்லம்மா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் மார்ச் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 Folk Artists, One Song! Devi Sri Prasad Brings India’s Folk Traditions Together for ‘Yellamma’
Music composer and Rockstar Devi Sri Prasad is taking a unique musical approach for his upcoming film ‘Yellamma’. The composer has recorded the film’s title song with 100 traditional folk musicians representing different states, cultures and musical traditions across India.
Known for his energetic compositions and musical innovations, Devi Sri Prasad has brought together an impressive ensemble of folk artists for this special track. The initiative aims to bring the richness and diversity of India’s traditional folk music onto a single platform. The much-awaited title song is expected to be released soon.
Directed by Venu Yeldandi, who earned recognition for his acclaimed film ‘Balagam’, ‘Yellamma’ is presented by Dil Raju and produced by Shirish. Adding to the excitement surrounding the project, Devi Sri Prasad will be making his debut as a lead actor with this film.
Ever since its announcement, ‘Yellamma’ has generated considerable curiosity among moviegoers and industry circles. The latest update about the involvement of 100 folk musicians has further raised expectations for the film’s music.
‘Yellamma’ is slated for a grand worldwide theatrical release on March 5 in five languages — Telugu, Tamil, Hindi, Malayalam and Kannada.
