ஸ்ரீ ரெட்டியால் தமிழ் சினிமா நட்சதிரங்களுக்கு ஆசிட் டெஸ்ட்.
முன்பு சுசி லீக்ஸ்..
அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்..
’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’.
அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்.. காரணம் இந்த ’அம்மாயி’ சமூக வலைதளங்களில் போட்ட மேட்டர் அப்படி.
’’வாய்ப்பு கொடுக்கிறேன் என்றார். படுக்கையில் பங்கு கொள் என்றார். எல்லாம் உற்சாகமாக முடிந்தது. படுக்கையில் வாய்ப்பு கொடுத்த எனக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னை அவர்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி கொண்டார்கள். அவர்களின் பெயர்களை வெளியிடுவேன்’’ என்றுதான் ஆரம்பித்தது அங்கு.
பங்காளிகளாக பிரிந்து சென்ற தெலுங்கானாவும், ஆந்திராவும் மீண்டும் ஒன்றாக உட்கார்ந்து ஸ்மார்ட்ஃபோனில் கிசுகிசுக்க ...

