Saturday, April 18
Shadow

Tag: #muthulingam

கவிஞர் முத்துலிங்கம் பிறந்த தினம்

கவிஞர் முத்துலிங்கம் பிறந்த தினம்

Birthday, Top Highlights
கவிஞர் முத்துலிங்கம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர். கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார். 1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார். அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது.[4] மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ...