சசிகுமார் மற்றும் சரத்குமார் தான் பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் நா நா படத்துக்கு இயக்குனர் -நிர்மல்குமார்
ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் "நா நா" படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா? என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இது குறித்து கூறும்போது, “ஆம், சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரைக்கதையை எ...