Saturday, April 18
Shadow

Tag: #naanseithakurumbu #mahavishnu #anjusuriyan #chandran

படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் ஒரு புதுமையான சினிமா விழா!

படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் ஒரு புதுமையான சினிமா விழா!

Latest News, Top Highlights
ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி , சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர் . இயக்குநர் மற்றும் படக் குழுவி...