அறிமுக இயக்குனர் ஷாரங்க் இயக்கத்தில் பரத் நடிக்கும் ‘நடுவன்’
நடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் 'நடுவன்' படத்தில் தந்தையாக நடிக்கிறார். மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா, ஏராளமான சவால்களை கொண்டிருந்தது. இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார்.
"படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர். இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனிய...
