Wednesday, October 28
Shadow

Tag: #nagesh thiraiyarangam #aari

தாயின் மரணத்தை விட தயாரிப்பாளர் பணம்  தான் முக்கியம் என்று சொன்ன நடிகர் ஆரி

தாயின் மரணத்தை விட தயாரிப்பாளர் பணம் தான் முக்கியம் என்று சொன்ன நடிகர் ஆரி

Latest News
நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களின் கதாநாயகன் நடிகர் ஆரி. இவர் தற்போது இசாக் இயக்கி வரும் நாகேஷ்திரையரங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டிவனத்தில் மிகப்பிரம்பாண்டமான தியேட்டர் செட்டில் நடைபெற்றது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தால் நடிகர் ஆரி இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சிலிர்க்க வைத்தார். படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகர் ஆரியின் தாயார் இறந்து விட்டார். இதைக்கேள்விப்பட்ட மொத்த யூனிட்டும் கலங்கிப்போக, இயக்குனருக்கு இடி விழுந்தது போல சோகம். அன்று நடந்த சம்பவத்தை இயக்குனரே விவரிக்கிறார். “அன்னைக்கி டபுள் கால்ஷீட் ப்ளான் பண்ணிருந்தோம். காலையில ஆரம்பித்து நைட்டுக்குள்ள எல்லா சீக்வென்ஸையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஏன்னா நாங்க போட்ருந்த செட்டோட பட்ஜெட் அப்படி. சூழ்நிலை இப்படி இருக்க, சம்பவம் கேள்விப்பட்டதும் எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...