விவசாயிகளின் பெருமை சொல்லும் நம்ம விவசாயம் பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீடு
நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் 'நம்ம விவசாயம்' என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.
விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சைய...