‘நந்தன் 2’ — பிரதிபலிப்பில் பேசும் சமூகக் கதை! இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
‘நந்தன் 2’ — பிரதிபலிப்பில் பேசும் சமூகக் கதை!
இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி தனது படைப்புகளை உருவாக்கி வரும் இயக்குநர் இரா. சரவணன், ‘நந்தன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
‘நந்தன் 2’ படத்தின் முதல் டைட்டில் லுக் வெளியாகியுள்ள நிலையில், அதன் வித்தியாசமான வடிவமைப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அல்லது கதையின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் டைட்டில் போஸ்டர்கள் உருவாக்கப்படும். ஆனால், ‘நந்தன் 2’ படத்தின் டைட்டில் லுக் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது.
கருப்பு-வெள்ளை பின்னணி...
