விக்ரம் வேதா, அவள், அறம் வரிசையில் ரிச்சி
நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, 'நட்டி' நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரிச்சி'. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட 'Trident Arts' ரவீந்திரன் 'ரிச்சி' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்.
'ரிச்சி' குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், ''நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தே...