லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படப்பிடிப்பு துவங்கியது.
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது தயாரிப்பில் மிகவும் தனித்துவமான, சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பொதுவாக நடிகைகள் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை ஒரு சில ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ளவே போராடும் இந்த காலத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. மக்கள் மனதையும், விமர்சகர்களையும் ஒரு சேர வென்று இருக்கிறார். 2017ல் அவர் நடித்த அறம் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது.
#Nayan63 அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சமூக வலைத்தளங்கள் முழுக்க இதை பற்றிய ட்வீட், ஷேர், கமெண்ட்ஸ் என பரவி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் சாதனை படைத்தது. இதுவே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய இடத்தை உணர்த்தியது.
தயாரிப்பாளர் கோட்டபாடி ஜெ ராஜேஷ், நயன்தாரா இணைந்து கொடுத்த...