பனிப்பொழிவும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நடுவே உருவான ‘ஒட்டாரம்’! – விரைவில் திரைக்கு வருகிறது
பனிப்பொழிவும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நடுவே உருவான ‘ஒட்டாரம்’! – விரைவில் திரைக்கு வருகிறது
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ஒட்டாரம்’ திரைப்படம், அக்டோபரில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், தனிமனித சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் விளைவுகள், ‘Self-Doctoring’ மற்றும் ‘Self-Realisation’ போன்ற கருத்துகளை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஒட்டாரம்’.
எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் சார்பில் P. சாமுவேல் தயாரித்துள்ள இப்படத்தை ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ புகழ் ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே, கன்னடத் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் கவனம் பெற்றுள்ள ரோபோ கணேசன் ஆகியோர் ...









