![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/03/Suriya-36-Title-NGK1.jpg)
`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்.ஜி.கே’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தோன்றத்தில் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
மேலும் போஸ்டரில் உரிமைக்காக ஒரு கூட்டம் போராடுவது போன்று உழைப்பாளர்களின் கைகள் ஓங்கியபடி போஸ்டர் வெளியாகி இருக்கிறத. எனவே சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.