நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானவர் நிலா. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து ஜாம்பவான், லீ,மருதமலை மற்றும் காளை உள்ளிட்ட ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தார்.
ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் தனது அக்கா பிரியங்கா சோப்ராவைப் போன்று, தானும் ஹாலிவுட் தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் பலனாக கனடா நாட்டு சின்னத்திரை தொடரிலும் நிலா நடித்து வருகிறார். 34 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இவர் நடித்த திரைப்படங்கள்
அன்பே ஆருயிரே, ஜாம்பாவான், லீ, மருதமலை, காளை, ஜெகன்மோகினி, இசை, கில்லாடி,...